மேலப்பாளையம் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம்


மேலப்பாளையம் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம்
x

மேலப்பாளையம் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.

திருநெல்வேலி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் 2 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. அந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று நடந்தது. இதை பா.ஜனதா முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் சென்றது. வீடுகளில் உள்ளவர்கள் தேங்காய் உடைத்து விநாயகரை வழிபட்டனர். இந்த ஊர்வலம் குறிச்சி சொக்கநாதர் கோவில் அருகில் முடிவடைந்தது. தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த சிலைகள் போலீசார் மூலம் உவரி கடற்கரை பகுதியில் கரைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.



1 More update

Next Story