ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெண் டாக்டர் மீது கும்பல் தாக்குதல்


ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெண் டாக்டர் மீது கும்பல் தாக்குதல்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 4:25 PM IST)
t-max-icont-min-icon

தூசி அருகே ஆஸ்பத்திரிக்குள் புகுந்த கும்பல் பெண் டாக்டரிடம் வாக்குவாதம் செய்து அவரை தாக்கியதால் நோயாளிகள் அலறி அடித்து ஓடினர்.

திருவண்ணாமலை

தூசி,

தூசி அருகே ஆஸ்பத்திரிக்குள் புகுந்த கும்பல் பெண் டாக்டரிடம் வாக்குவாதம் செய்து அவரை தாக்கியதால் நோயாளிகள் அலறி அடித்து ஓடினர்.

கிளினிக்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அடுத்த புதுப்பாளையம் கூட் ரோடில் டாக்டர் அஞ்சனாத்திரி (வயது 30) என்பவர் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கிளினிக்கிற்கு பெண்கள் உள்பட நாலு பேர் கும்பலாக நேற்று முன்தினம் இரவு வந்தனர்.

அவர்கள் டாக்டர் அஞ்சனாத்திரியிடம் கிளினிக்கை காலி செய்துவிட்டு சாவி கொடுக்கும்படி கூறினர். அவர் மறுத்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது 4 பேரும் சேர்ந்து டாக்டர் அஞ்சனாத்திரியை சராமரியாக தாக்கினார்கள். இதைக் கண்ட நோயாளிகள் அங்கிருந்து அலறியடுத்து வெளியேறினர்.

பொருட்கள் சேதம்

அதன்பிறகும் அந்த கும்பல் ஆஸ்பத்திரியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர்். கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த டாக்டர் அஞ்சனாத்திரி தூசி போலீசில் புகார் செய்தார் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட முருகன் (57) என்பவரை கைது செய்தனர். மற்றவர்கள் தைலமறைவாகி விட்டனர்.அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



Next Story