அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடிரூ.2 லட்சத்துக்கு விற்பனை


அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடிரூ.2 லட்சத்துக்கு விற்பனை
x

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது.

காங்கேயம் காளை மாடு

அந்தியூர் கால்நடை சந்தை நேற்று கூடியது. இதற்கு அந்தியூர், ஈரோடு, அத்தாணி, ஆப்பக்கூடல், கள்ளிப்பட்டி, எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், ஒலகடம், மேட்டூர், கொளத்தூர், பண்ணவாடி, தர்மபுரி, பர்கூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கால்நடைகள் கொண்டு வரப்பட்டன.

இதில் காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.2 லட்சத்துக்கும், கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்சம் ரூ.80 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.70 ஆயிரத்துக்கும் விலை போனது.

எருமை மாடு

எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.75 ஆயிரத்துக்கும், சிந்து பசுமாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.40 ஆயிரத்துக்கும், ஜெர்சி பசு மாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.45 ஆயிரத்துக்கும், காளைமாடு ஜோடி குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.50 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ஒன்று குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.15 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டன.

ஈரோடு, சத்தியமங்கலம், திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், மேட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கால்நடைகளை விலை பேசி பிடித்து சென்றனர்.


Next Story