சமூகவிரோத செயல்களில் ஈடுபட்ட 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை


சமூகவிரோத செயல்களில் ஈடுபட்ட 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை
x

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கையால் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்ட 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சென்னை

சென்னையில் சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரசாந்த் (வயது 30), கும்முடிப்பூண்டியை சேர்ந்த அருண்ராஜ் (27), கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (26), சசிகுமார் (26), மேட்டுப்பாளையம் கந்தன் தெருவை சேர்ந்த எலி என்ற கமலக்கண்ணன் (22), எழில்நகரை சேர்ந்த ஆரோக்கியராஜூ (39), சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்த எலி கார்த்திக் (27), போரூர் காந்தி நகரை சேர்ந்த இளங்கோ (29) ஆகிய 8 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களின் பரிந்துரையை ஏற்று இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்தார். சென்னையில் இந்த ஆண்டு இதுவரையில் 45 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story