வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தாமரைக்குளம்:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், பழஞ்சநல்லூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜோதி(வயது 42). இவர் தற்போது அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், முத்துசேர்வாமடத்தில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் இவர் மீன்சுருட்டி மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தார். வழிப்பறி சம்பந்தமாக மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த மாதம் அவரை கைது செய்து, ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும் அவர் வெளியே வந்தால் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபடுவார் என்பதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார். அதனை ஏற்று ஜோதியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டார். இதையடுத்து ஜோதியை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். அதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.