பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி

திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வதாக வந்த தகவலின்பேரில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிரபின் கிறிஸ்டல்ராஜ் (வயது 40), 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், பிரபின் கிறிஸ்டல்ராஜ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ரமீஜாபானு (50) ஆகியோரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் போலீஸ் விசாரணையில், பிரபின் கிறிஸ்டல்ராஜ், ரமீஜா பானுவுடன் சேர்ந்து கொண்டு பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்களது வாழ்க்கையை அவர் சீரழித்ததும், அத்துடன் அந்த சிறுமியை அவர் கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும், இதற்கு சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. பிரபின் கிறிஸ்டல்ராஜ், ரமீஜா பானு இருவரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர்கள் என்பதால் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டார்.


Next Story