கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகாவிற்கு உட்பட்ட ஆலங்குடி முருகமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). இவர் குத்தாலம் பகுதியில் கஞ்சா விற்று வந்தார். அவரை குத்தாலம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மணிகண்டனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை திருச்சி சிறை அதிகாரியிடம் போலீசார் வழங்கினர்.





1 More update

Next Story