2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லை மாவட்டத்தில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருநெல்வேலி

பணகுடி அருகே உள்ள கலந்தபனையை சேர்ந்த அலெக்ஸ் பிரபாகரன் (வயது 34), கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை சேர்ந்த தாம்சன் (33) ஆகியோரை பணகுடி போலீசார் அடிதடி மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் அஜிகுமார் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று இவர்களை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பிரபாகரன், தாம்சன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் வழங்கினார்.


Next Story