2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 3 Nov 2022 6:45 PM GMT (Updated: 3 Nov 2022 6:46 PM GMT)

கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தென்காசி

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூலாங்குளம் கிராமத்தில் கடந்த மாதம் 8-ந் தேதி ஆலங்குளம் வட்டாலூரை சேர்ந்த முத்துராமலிங்க ராஜன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி அருணாச்சலம் மகன் கடல்மணி என்ற கடற்கரை (வயது 40), கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அழகுமணி மகன் ராபின் (43) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ், 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.Next Story