2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரியா (வயது 35). இவர் திருச்சியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி தாலி சங்கிலியை பறித்து சென்ற இனாம்குளத்தூரை சேர்ந்த செல்வராஜ் (44), குண்டூர் அய்யனார் நகரை சேர்ந்த புகழேந்தி (50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விசாரணையில், இருவர் மீதும் கே.கே.நகர் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியையிடம் தங்க தாலி பறித்தது, விமானநிலைய பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்றது உள்ளிட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் இருவரும் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் கொண்டவர்கள் என்பதால் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார்.

1 More update

Next Story