2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பேரளம் அருகே கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருவாரூர்

கொரடாச்சேரி:

பேரளம் காவல் சரகம் கிளியனூரை சேர்ந்த கனகராஜ் என்பவர் கடந்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார். இது கொலை தொடர்பாக கிளியனூரை சேர்ந்த சகோதரர்கள் விஸ்வா (வயது 22), ஜெயக்குமார் (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தார். அதன்பேரில் இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார். அதையடுத்து விஸ்வா, ஜெயக்குமார் ஆகிய இருவரையும், நாகப்பட்டினம் கிளை சிறையில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story