3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருநெல்வேலி
கோபாலசமுத்திரம் ஆற்றுப்பாலம் அருகே சுத்தமல்லி வ.உ.சி.நகரை சேர்ந்த கொம்பையா (52) என்பவர் கடந்த 3-ந் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில் சுத்தமல்லி வி.ஓ.சி நகரை சேர்ந்த கருத்தபாண்டி என்ற கண்ணன் (45), சத்யாநகர் குடிசை மாற்று வாரியம் பகுதியை சேர்ந்த மாரிபாண்டி (26), நரசிங்கநல்லூர் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த ஜான் டேனியல் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். இதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story