3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கொலை, வழிப்பறி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

பணகுடி அருகே உள்ள யாக்கோபுரம் நெடுவிளையை சேர்ந்தவர் பால்சுபி (வயது 34). இவர் அதே ஊரைச் சேர்ந்த செல்வன் என்பவரை கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பழவூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல் தாழையூத்து போலீஸ் நிலைய பகுதியில் அடிதடி, கொலை முயற்சியில் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டதாக சங்கர்நகர் பகுதியை சேர்ந்த சுபாஷ் (22) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் முக்கூடல் பகுதியில் அடிதடி, கொலை முயற்சியில் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற செல்வம் (21) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், இன்ஸ்பெக்டர்கள் அஜிகுமார் (பணகுடி), சந்திரசேகரன் (தாழையூத்து), அன்னபூரணி (சுத்தமல்லி) ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். இதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் நேற்று சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.


Next Story