4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கொலை வழக்கு

தூத்துக்குடி அந்தோணியார்புரத்தை சேர்ந்த சோலையப்பன் மகன் மாரிமுத்து (வயது 38) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி 3 செண்ட் அந்தோணியார்புரத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் முகேஷ் என்ற பனை (23), தூத்துக்குடி எஸ்.என்.ஆர் நகரை சேர்ந்த ஜெயராஜ் மகன் முத்துலிங்கம் (25), தூத்துக்குடி சக்திநகரை சேர்ந்த தங்கமாரி மகன் பத்திரகாளிமுத்து என்ற முத்துப்பாண்டி (26) ஆகிய 3 பரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர். யோரை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இதே போன்று மெஞ்ஞானபுரம் கைலாசபுரத்தை சேர்ந்த சந்தோஷ் மகன் சுயம்புலிங்கம் (35) என்பவரை தட்டப்பாறை போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர்.

263 பேர்

இந்த 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், முகேஷ் என்ற பனை, முத்துலிங்கம், பத்திரகாளிமுத்து என்ற முத்துப்பாண்டி, சுயம்புலிங்கம் ஆகிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர். நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 பேர் உள்பட மொத்தம் 263 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story