4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கோவை
கோவை மாவட்டம் கே.ஜி. சாவடி காவல் நிலைய பகுதியில் உயர்ரக போதை பொருள் விற்பனை செய்த பாலக்காட்டை சேர்ந்த முகமது ஜெசீர் (21) அப்துல் ராஷிக் (22) ஆகிய 2 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கிணத்துக்கடவு பகுதியிலும் போதைப் பொருள்களை விற்பனை செய்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் (32) மற்றும் கிஸார் அகமது (32) ஆகிய 2 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில். ஈடுபட்ட குற்றத்திற்காக முகமது ஜெசீர், அப்துல் ராஷிக், ராம்குமார் மற்றும் கிஸார் அகமது ஆகியோர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் நான்கு நபர்களின் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள 4 பேர்களிடம் வழங்கப்பட்டது.