4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருவாரூர்

வலங்கைமான்:

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பாலியல் தொல்லை

வலங்கைமானை அடுத்த பெருங்குடி மேலத்தெருவைச் சேர்ந்த குமார் மகன் விக்னேஷ் (வயது23), ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைந்தனர்.

அரித்துவாரமங்கலம் மேல காலனியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் கார்த்தி (35),தியாகராஜன் மகன் சுதாகர் (34), கிட்டி என்கிற ராஜேந்திரன் (60) ஆகிய 3 பேரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்த நிலையில் இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் விக்னேஷ், கார்த்தி, சுதாகர், ராஜேந்திரன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story