4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லையில் அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் 50 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருநெல்வேலி

நெல்லையில் அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் 50 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

50 பவுன் கொள்ளை

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் ஜான்சிநகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 44). இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய வீட்டில் கடந்த ஜனவரி மாதம் மர்மநபர்கள் 4 பேர் நுழைந்து அரிவாளை காட்டி 50 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி சோரீஸ்புரத்தை சேர்ந்த முத்து என்ற கோடா (22), முத்தையாபுரம் பாரதிநகரை சேர்ந்த கிஷோர் டேனியல் (20), லயன்ஸ் டவுனை சேர்ந்த சிலுவை என்ற சில்வஸ்டர் (26), முத்தையாபுரம் ராஜீவ்நகரை சேர்ந்த கண்ணன் (19) ஆகியோரை கைது செய்தனர்.

குண்டர் சட்டம்

இந்த நிலையில் கைதான 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். அதனை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஏற்று 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் பேரில் முத்து என்ற கோடா, கிஷோர் டேனியல், சிலுவை என்ற சில்வஸ்டர், கண்ணன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்.


Next Story