கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

வாலிபர் கொலையில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருநெல்வேலி

நெல்லை அருகே தாழையூத்து குறிச்சிகுளம் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் வெள்ளியப்பன் (வயது 30). இவர் கடந்த மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கர்நகர் வடக்கு சிதம்பரநகரை சேர்ந்த பேச்சிராஜா (23), தச்சநல்லூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த செல்வகணபதி (23) உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் பேச்சிராஜா, செல்வகணபதி ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று, 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணையை தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் வழங்கினார்.


Next Story