பெண்ணை கொலை செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பெண்ணை கொலை செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள மணல்திட்டு புதரில் திருச்சி முதுவத்தூர் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி என்கிற செல்வி (வயது 37) என்பவர் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கல்லக்குடியை சேர்ந்த நாகராஜ் (53) என்பவர் செல்வியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் நாகராஜ் குற்றச்செயல் புரியும் எண்ணம் கொண்டவர் என்பதும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் என்பதும் தெரியவந்ததால் அவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையின்படி நாகராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள நாகராஜிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.