கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரையை சேர்ந்த திரைப்பட இயக்குனர் செல்வராஜ் என்கிற அப்துல் ரகுமான் கொலை வழக்கில் ஏற்கனவே சேலம் மாவட்டம், நெதிமேடு, காமராஜா் நகரை சேர்ந்த சேட்டுவின் மகன் மூரத்தி என்ற தட்சணாமூர்த்தியை (வயது 30) பெரம்பலூர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தட்சணாமூர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று தட்சணாமூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தட்சணாமூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சக்திவேல், ஏட்டு செல்வராணி ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.


Next Story