கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி

மயிலாடுதுறை மாவட்டம், மூவலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 20). கட்டிட ெதாழிலாளி. இவரை கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதி அதே பகுதியில் தெற்கு தெருவை சேர்ந்த கபிலனும், ஒரு பள்ளி மாணவரும் சேர்ந்து கொலை செய்து தண்டவாளத்தில் போட்டுள்ளனர். இது குறித்து மயிலாடுதுறை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கபிலன், ராஜ்குமாரை ஓரின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதும், அவர் மறுத்ததால் கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் கபிலன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவார் என்று விசாரணையில் தெரியவந்தது. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் கபிலனுக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.


Next Story