பாலியல் வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பாலியல் வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது,
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 49). இவர், இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தநிலையில், பால்ராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பால்ராஜை சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி பால்ராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான நகலை சிறையில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர்.
Related Tags :
Next Story