ரூ.16 லட்சம் கொள்ளையடித்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரூ.16 லட்சம் கொள்ளையடித்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 11 July 2023 10:47 PM IST (Updated: 12 July 2023 4:21 PM IST)
t-max-icont-min-icon

கலவை அருகே மிளகாய் பொடி தூவி, கத்தியை காட்டி மிரட்டி ரூ.16 லட்சம் கொள்ளையடித்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ராணிப்பேட்டை

கலவை

கலவை அருகே மிளகாய் பொடி தூவி, கத்தியை காட்டி மிரட்டி ரூ.16 லட்சம் கொள்ளையடித்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ரூ.16 லட்சம் கொள்ளை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடைபெற்று வருகிறது.

இந்த நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் புளிரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தமிழ் பிரியன் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரும் கடந்த மாதம் 16-ந் தேதி அன்று வசூல் ஆன ரூ.16 லட்சத்து 30 ஆயிரத்தை செய்யாறில் உள்ள தலைமை நிதி நிறுவனத்திற்கு இரவில் எடுத்து சென்றனர்.

கலவையை அடுத்த முள்ளுவாடி அருகே சென்றபோது அவர்களை 4 பேர் வழிமறித்து, மிளகாய் பொடி தூவி கத்தியை காட்டி மிரட்டி ரூ.16 லட்சத்து 30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து நிதி நிறுவன மேலாளர் தமிழ் பிரியன் கலவை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தூசி, கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், புளியரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த யுவராஜ் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதை ஏற்று அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல் சிறையில் இருக்கும் இருவரிடமும் வழங்கப்பட்டது.


Next Story