ரெயில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரெயில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

ரெயில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்கிற ராக்கெட் ராஜா. இவர் ரெயில்களில் தொடர் திருட்டு, செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டதை கண்காணித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் ராஜா என்கிற ராக்கெட் ராஜா மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவரது குற்றங்களை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி கொடுத்த அறிக்கையின் படி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் மற்றும் திருச்சி தெற்கு துணை கமிஷனர் ஸ்ரீதேவி பரிந்துரையின் பேரில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் ராஜா என்கிற ராக்கெட் ராஜாவிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகல் வழங்கப்பட்டது.


Next Story