கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x

வேலூரில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சைதாப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள தனியார் மருத்துவமனையின் அருகே நின்று கொண்டிருந்த நபரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புதுமனை பகுதியை சேர்ந்த அருணாசலம் (வயது 54) என்பதும், கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் உடனடியாக அவரை கைது செய்தனர். அருணாசலம் வைத்திருந்த 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story