கஞ்சா வைத்திருந்தவர் கைது
தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடபாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் தூத்துக்குடி வலயநாதசுவாமி கோவில் தெருவைச் சேர்ந்த அலமேலுநாதன் (58) என்பதும், சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே போலீசார் அலமேலுநாதனை கைது செய்து, 400 கிராம் கஞ்சா, செல்போன், ரூ.8 ஆயிரத்து 670 பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story