கஞ்சா விற்பனையாளர் குண்டர் சட்டத்தில் கைது


கஞ்சா விற்பனையாளர் குண்டர் சட்டத்தில் கைது
x

கஞ்சா விற்பனையாளர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்


திருச்சுழி அருகே உள்ள நேத்தியாயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் (வயது25). இவர் கடந்த 17.2.2023 அன்று 2 கிலோ 235 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அவர் மேலும் இம்மாதிரியான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடாமல் இருக்க அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதின் பேரில் திருச்சுழி போலீசார், மனோகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் எச்சரித்துள்ளார்.


Related Tags :
Next Story