கஞ்சா விற்றவர்கள் கைது


கஞ்சா விற்றவர்கள் கைது
x

மதுரை திருமங்கலம், செல்லூர் பகுதிகளில் கஞ்சா விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்

மதுரை

திருமங்கலம்

திருமங்கலம் டவுன் சப்-இன்ஸ்பெக்்டர் மாரிக்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரெயில் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சாவுடன் நின்றிருந்த வாலிபரை பிடித்தனர். அவர் பையை சோதனையிட்ட போது 1½ கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் உரப்பனூரை சேர்ந்த சுந்தரபாண்டி (வயது35) என்பது தெரியவந்தது. மதுரை செல்லூர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேல தோப்பு பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த வீரலட்சுமி (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 1¼ கிலோ கஞ்சா, ரூ.14 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story