ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியவருக்கு 5 ஆண்டு சிறை


ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியவருக்கு 5 ஆண்டு சிறை
x

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியவருக்கு 5 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு.

சென்னை,

கடந்த 2019-ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் 2.10.2019 அன்று காஞ்சீபுரத்தை அடுத்த பட்டறைபெருமத்தூர் டோல்கேட் அருகே சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா நல்லச்சான்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 41) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி திருமகள் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் கே.ஜே.சரவணன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, லட்சுமணன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story