பி.ஏ.பி.வாய்க்கால் கரையோரம் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்


பி.ஏ.பி.வாய்க்கால் கரையோரம் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்
x

பி.ஏ.பி.வாய்க்கால் கரையோரம் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்

திருப்பூர்

காங்கயம்

காங்கயம் அருகே பி.ஏ.பி வாய்க்கால் கரையோரம் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் காங்கயம் வழியாக பி.ஏ.பி கிளை வாய்க்கால் வெள்ளகோவில் வரை செல்கிறது. இந்த தண்ணீரை வைத்து பெரும்பாலும் பாசனம் செய்ய இயலாது.ஆனாலும் விவசாய நிலங்களில் நீர் பிடிப்பு ஏற்ப்படும் வாய்ப்பு உள்ளது.இதனால் வாய்காலில் தண்ணீர் வரும்போது விவசாயிகள் ஆங்காங்கே மதகுகள் வழியாக முறைப்படுத்தி விடப்படும் தண்ணீரை தங்களின் விவசாய நிலங்களில் விட்டு விடுவார்கள்.இதனால் நிலம் ஓரளவுக்கு நீர் பிடிப்பு ஏற்பட்டு அங்குள்ள கிணறுகளில் தண்ணீர் உயர வாய்ப்பு ஏற்படும்.

இந்தநிலையில் காங்கயம் அருகே திருப்பூர் சாலையில் இருந்து பழையகோட்டை சாலை வரை செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் இரு கரைகளிலும் குப்பைகளை கொட்டுவதும், கழிவு நீரை வாய்க்காலில் வெளியேற்றுவது என சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பல்வேறு குறைகளை அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பி.ஏ.பி வாய்க்கால் கரையோரம் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

--


Next Story