கல்லூரி அருகே கொட்டப்பட்ட கழிவறை கழிவுகள்


கல்லூரி அருகே கொட்டப்பட்ட கழிவறை கழிவுகள்
x

திருப்பூர் காலேஜ் ரோடு சிக்கண்ணா கல்லூரி அருகே கழிவறை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் காலேஜ் ரோடு சிக்கண்ணா கல்லூரி அருகே கழிவறை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கழிவறை கழிவுகள்

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி உள் விளையாட்டு அரங்கம் அருகே கல்லூரியின் சுற்றுச்சுவர் உள்ளது. இந்த சுவரின் வெளிப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய ரோட்டின் அருகே நேற்று முன்தினம் அதிகாலையில் யாரோ செப்டிக் டேங்கின் அடிப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மண்ணை கொட்டியுள்ளனர்.

இந்த கழிவறை கழிவால் இப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதேபோல் அருகாமையில் உள்ள ஒரு வீதியிலும் இந்த கழிவு கொட்டப்பட்டுள்ளது. இது நேரடியான மனித கழிவாக இல்லாத போதிலும் செப்டிக் டேங்கில் இருந்து அள்ளப்பட்ட மண் என்பதால் இதன் மூலம் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது.

பொதுமக்கள் பாதிப்பு

அருகாமையில் குடியிருப்புகள் அதிகம் இருப்பதால் அங்கு வசிக்கும் மக்களுக்கும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதேபோல் இவ்வழியாக தினமும் அதிக அளவிலான வாகனங்கள் செல்கின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே இங்கு கொட்டப்பட்டுள்ள கழிவை அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் இது போன்ற விஷயங்கள் பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்து விடும். எனவே இது போன்ற தவறுகள் மேலும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.



Next Story