சத்திரப்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு தேங்கி கிடக்கும் குப்பை


சத்திரப்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு தேங்கி கிடக்கும் குப்பை
x

சத்திரப்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு தேங்கி கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது.

விருதுநகர்

ராஜபாளையம்,

சத்திரப்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு தேங்கி கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது.

மருத்துவ துணி உற்பத்தி

ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் 30 ஆண்டுகளுக்கு முன் கைத்தறி நெசவுத்தொழில் பிரதானமாக இருந்தது. தொழில் வளர்ச்சி காரணமாக மருத்துவ துணி உற்பத்தியை அதிகரித்து வருகிறது. இங்கு உற்பத்தியாகும் மருத்துவ துணி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

தொழில் மயமாக மாறிய இந்த கிராமத்தில் தற்போது 80-க்கும் மேற்பட்ட பேண்டேஜ் கம்பெனிகள், 15- க்கும் எக்ஸ்போர்ட் நிறுவனங்கள், 600- க்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தொழில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அடிப்படை வசதிகள் இந்த கிராமத்தில் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேங்கி கிடக்கும் குப்பை

தொழில்வளர்ச்சி நிறைந்த சத்திரப்பட்டியில் பஸ்நிலையம் இல்லை. பஸ்நிறுத்தம் மட்டுமே உள்ளது. மேலும் மயான வசதி, வாருகால் வசதி, குப்பை கிடங்கு, கண்மாய் பராமரிப்பு இல்லை.

சத்திரப்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. ஆதலால் மருத்துவமனைக்கு வருபவர்கள் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள மக்களும் சிரமப்படுகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் மட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

அதிகாரிகள் நடவடிக்கை

அதேபோல சத்திரப்பட்டியில் வேன் நிறுத்துவதற்கு என தனியாக இடம் இல்லாததால் அனைத்து வேன்களும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

ஆதலால் பஸ்கள், வேன் நிறுத்துவதற்கு போதிய இடத்தை ஒதுக்க வேண்டும். சத்திரப்பட்டியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story