நெலாக்கோட்டை ஊராட்சியில் குவியும் குப்பைகள் -சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி


நெலாக்கோட்டை ஊராட்சியில் குவியும் குப்பைகள் -சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 15 Aug 2023 12:30 AM IST (Updated: 15 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நெலாக்கோட்டை ஊராட்சியில் குவியும் குப்பைகள் -சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்டு 146-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர். மேலும் இப்பகுதிகளில் ஏராளமான கடைகளும், ஓட்டல்களும் உள்ளன. வீடுகள், கடைகளில் சேகரமாகும் குப்பைக் கழிவுகளை நெலாக்கோட்டை ஊராட்சியின் தூய்மை பணியாளர்கள் சேகரித்து குப்பை லாரிகளில் ஏற்றி கொண்டு சென்று வருவாய் துறை சார்பில் ஒதுக்கப்படும் இடங்களில் மொத்தமாக கொட்டி வந்தனர். இவ்வாறு குப்பைகளை கொட்டும் இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாட்டவயல் அருகே கொட்டாடு பகுதியில் மாவட்ட கலெக்டர் அம்ரீத் உத்தரவுபடி கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா மற்றும் பந்தலூர் வருவாய்த்துறையினர் வருவாய்துறைக்கு சொந்தமான நிலத்தை தேர்வு செய்து நெலாக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்திற்கு குப்பை கொட்ட. அனுமதித்தனர். ஆனால் அந்த நிலத்திலும் ஊராட்சி சார்பில் குப்பைகளை கொட்டியபோது சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஊராட்சி பகுதிகளில் சேரும் குப்பைகளை கொட்ட இடம் இல்லாமல் நெலாக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் தவித்து வருகிறது. இதன்காரணமாக தற்போது குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டு நெலாக்கோட்டை, பிதிர்காடு பஜார், பாட்டவயல், கரியசோலை உள்பட பகுதிகளில் சாலையோரமும் தெருவோரமும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அவல நிலையை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story