அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு


அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
x

நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு

திருநெல்வேலி

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு கூட்டம் செல்லாது என தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நெல்லையில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களுக்கும் இனிப்புகளை வழங்கினர்.

பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், பகுதி செயலாளர் ஜெனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story