எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை


எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை
x

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் மாலை அணிவித்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பஸ் நிலையத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர செயலாளர் கே.ஆர்.சதீஷ் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் தாமோதரன், வேலூர் மண்டல தகவல் தொழில் நுட்ப இணை செயலாளர் அக்ரி பாலாஜி, மாவட்ட மாணவரணி செயலாளர் ஜிம்.பிரபு, சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.பி.கே.அப்துல்லா, பேரூராட்சி மன்ற தலைவர் கலா சதீஷ், துணைத் தலைவர் நீலாவதி தண்டபாணி, நித்தியா சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி உறுப்பினர்கள் மேத்தாஜிபிரபு, தினேஷ், மணிகண்டன், காமராஜ், யுவராஜ், ஆகியோர் வரவேற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று வாழைப்பந்தல்- திமிரி இணைப்பு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், பஸ் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் திமிரி நகர செயலாளர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன், நகர மகளிர் அணி செயலாளர் தேன்மொழி, மற்றும் அ.தி.மு.க. மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கலவை அடுத்த மாம்பாக்கம் -ஆரணி இணைப்பு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சொறையூர் குமார் தலைமையில் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பேசுகையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வரும் சட்டமன்ற தேர்தலில் இன்றைய எதிர்க்கட்சி தலைவரை முதல்-அமைச்சராக்க உறுதி ஏற்றுக்கொள்வோம் என்றார். நிகழ்ச்சியில் திமிரி மேற்கு ஒன்றிய செயலாளர் நா.வா.கிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story