அப்துல்கலாம் படத்திற்கு மாலை அணிவிப்பு


அப்துல்கலாம் படத்திற்கு மாலை அணிவிப்பு
x

பிறந்தநாளையொட்டி அப்துல்கலாம் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

அரியலூர்

மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை நாயகனுமான அப்துல்கலாமின் பிறந்த நாள் நேற்று உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அப்துல் கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை பேசுகையில், இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல்கலாமின் கனவினை மாணவர்களாகிய நீங்கள் நிறைவேற்ற வேண்டும். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கி இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்த வேண்டும் என்றார். இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் அப்துல்கலாம் பெருமைகளையும், கண்டுபிடிப்புகளையும் மாணவர்களுக்கு விளக்கி கூறினர்.

1 More update

Next Story