அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு


தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-04T00:15:43+05:30)

பெரியகுளத்தில் அ.தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேனி

அண்ணா நினைவு தினம்

பெரியகுளத்தில் நகர, ஒன்றிய அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் அண்ணா நினைவு தினத்தையொட்டி நேற்று பெரியகுளம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் எம்.அப்துல் சமது தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, பெரியகுளம் நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குழுத் தலைவர் ஓ.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாஹிர், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாநில அமைப்பு செயலாளர் மஞ்சுளா முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.கள்ளிப்பட்டி சிவக்குமார், கீழவடகரை ஊராட்சி துணைத் தலைவர் ராஜசேகர் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிலைக்கு மாலை அணிவிப்பு

இதேேபால் பெரியகுளம் நகர, ஒன்றிய அ.தி.மு.க. எடப்பாடி அணி சார்பில் அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும், முன்னாள் ஒன்றிய செயலாளருமான அன்னபிரகாஷ் தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் பெரியகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியவீரன், தேனி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச்செயலாளர் வக்கீல் தவமணி, வெங்கடேசன், கணேஷ், இலக்கியன், ராம்ஜி, ரஞ்சித் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.


Related Tags :
Next Story