இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு
பிறந்த நாளையொட்டி கீழச்சிவல்பட்டியில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
திருப்பத்தூர்,
கீழச்சிவல்பட்டி இந்திராநகரில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அங்குள்ள இந்திராகாந்தி சிலைக்கு இந்திராநகர் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற விழாவில் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமை தாங்கி இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் காந்தி, முன்னாள் இணைச்செயலாளர் மருதுபாண்டியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், தங்கராசு, விஸ்வநாதன், திருப்பத்தூர் சட்டமன்றத்தொகுதி தலைவர் சேதுமெய்யப்பன், அருள்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் நகர் காங்கிரஸ் தலைவர் அழகுமணிகண்டன் வரவேற்றார். முடிவில் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் செல்வமணி நன்றி கூறினார்.