காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு


காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராக்கெட் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பனங்காட்டுப்படை கட்சி நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா 51-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம் பனங்காட்டுப்படை கட்சி சார்பாக, பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் தென்காசி மாவட்ட செயலாளர் அகரகட்டு ஆனந்த் நாடார் முன்னிலையில், மாநில மாணவரணி தலைவர் கோம்னஸ் நாடார் தலைமையில், ஆலங்குளம் நகர செயலாளர் அலெக்ஸ் நாடார், தென்காசி இளைஞரணி செயலாளர் சதீஸ்நாடார், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், மற்றும் நிர்வாகிகள் சுரேஷ், மாரிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர். பின்னர் தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடாரை சந்தித்து சால்வை அணிவித்தனர்.


Next Story