காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x

மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி, நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

திருநெல்வேலி

மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி, நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பிறந்த நாள் விழா

மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை டவுன் சந்தி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் கோட்டூர் ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்ககுமார், கவி பாண்டியன், பரணி இசக்கி, மாவட்ட நிர்வாகிவண்ணை சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க

அ.ம.மு.க. சார்பில் காந்தி சிலைக்கு நெல்லை தெற்கு மாவட்ட இசக்கிமுத்து தலைமையில், அமைப்பு செயலாளர் வி.பி.குமரேசன் முன்னிலையில் காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

த.மா.கா-ச.ம.க.

நெல்லை டவுனில் உள்ள காந்தி சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஞானசேகர் தலைமையில், நெல்லை பகுதி செயலாளர் அழகேசராஜா, மாவட்ட பிரதிநிதி சரத் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நெல்லை மாவட்ட வர்த்தக அணி தலைவர் சக்சஸ் புன்னகை தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட துணைத்தலைவர் டி.பி.எஸ்.சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் தாயப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதே போல் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


Next Story