தையல்கலை தொழிலாளர்கள் பேரணி
தையல்கலை தொழிலாளர்கள் பேரணி
முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தையல்கலை தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. பேரணியை வர்த்தக சங்கத் தலைவர் ஜஹீபார்அலி தொடங்கி வைத்தார். இதில் நகர் வர்த்தக சங்க செயலாளர் சேகர், பொருளாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினார். தையல்கலை தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் பழனி, பொருளாளர் பூவலிங்கம், மகளிர் அணி தலைவி செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் குருநாதன் வரவேற்றார். இப்பேரணி முதுகுளத்தூர் காந்தி சிலையிலிருந்து தொடங்கி முதுகுளத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வரை சென்றது. அங்கு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்ன கண்ணு தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டார்.. இந்நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், தையல் கலை தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் செந்தில்குமார், துணைத் தலைவி பேபி, மாவட்டத் துணைச் செயலாளர் கண்ணகி ஆறுமுகம் உள்பட தையல்கலை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.