தாமோதர நாராயண பெருமாள் கோவிலில் கருட சேவை


தாமோதர நாராயண பெருமாள் கோவிலில் கருட சேவை
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோவிலில் கருட சேவை நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியம் திருக்கண்ணங்குடி ஊராட்சியில் தாமோதர நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 3-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி தாமோதர நாராயண பெருமாள் தினமும் பல்வேறு வாகனத்தில் வீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தாமோதர நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கருடசேவை நிகழ்ச்சி நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 12-ந்தேதி தேரோட்டம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.


Next Story