சவுரிராஜபெருமாள் கோவிலில் கருட சேவை
திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலில் கருட சேவை
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கருட சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கருட சேவை நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்டு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பவளக்கால் சப்பரத்தில் வீதிஉலா நடைபெற்றது. இதைதொடர்ந்து கோவிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் குணசேகரன், தக்கார் முருகன், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் ராதாகிருட்டிணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story