லட்சுமி நாராயணசாமி கோவிலில் கருடசேவை விழா


லட்சுமி நாராயணசாமி கோவிலில் கருடசேவை விழா
x

பெரும்புலிப்பாக்கம் லட்சுமி நாராயணசாமி கோவிலில் கருடசேவை விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் அடுத்த பெரும்புலிப்பாக்கம் கிராமத்தில் உள்ள லட்சுமி நாராயணசாமி கோவிலில் கடந்த புதன்கிழமை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடைசி நாளான நேற்று கருடசேவை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் பக்தர்கள் நாலாயிரதிவ்ய பிரபந்த பாடல்களை பாடி சென்றனர். கருடவாகனத்தில் சாமி வீதி உலா வந்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story