எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்


எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
x

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் செந்துறை தாசில்தார் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story