எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
திருச்சி
மண்ணச்சநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமை தாங்குகிறார். இதில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு மண்ணச்சநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு உருளை வினியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story