எரிவாயு வினியோக குறைதீர்க்கும் கூட்டம்


எரிவாயு வினியோக குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எரிவாயு வினியோக குறைதீர்க்கும் கூட்டம் 29-ந்ேததி நடக்்கிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு வினியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந்தேதி மாலை 3 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story