இருதரப்பினரிடையே கருத்து கேட்புகூட்டம்


இருதரப்பினரிடையே கருத்து கேட்புகூட்டம்
x

அவினாசியில் கியாஸ் குடோன் பிரச்சனைஇருதரப்பினரிடையே கருத்து கேட்புகூட்டம்

திருப்பூர்

அவினாசி

அவினாசி பேருராட்சி 3-வது வார்டு பகுதியில்இயங்கிவரும் சமையல்கியாஸ் குடோன் பிரச்சனை குறித்து கருத்து கேட்பு கூட்டம் அவினாசி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது.

பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் செயல் அலுவலர் ராமலிங்கம், துணைத்தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கியாஸ் குடோன் நிர்வாகிகள் 3-வது வார்டு பகுதி மக்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பொதுமக்கள் கூறுகையில் 100 மீட்டர் சுற்றளவிற்குடியிருப்பு இல்லாத இடத்தில்தான் குடோன் அமைக்க வேண்டும். ஆனால் குடோன் அமைக்கப்பட்ட இடத்தில் திட்ட சாலை, அடுத்தடுத்து குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் போலியானவரைபடம் காண்பித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில்குடோன் அமைக்கப்பட்டடுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரதம், பேருராட்சி அலுவலம் முற்றுகை உள்ளிட்ட பல கட்ட போராட்டம் நடத்தி உள்ளோம். எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக போலியான ஆவணங்கள் காண்பித்த கட்டப்பட்ட கியாஸ் குடோனை அப்புறப்படுத்த வேண்டும என்றனர்.

இது குறித்து கியாஸ் குடோன் நிர்வாகி விஜய் கூறுகையில் தொழில்பேட்டைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சட்டப்படி சட்டவிதிகளுக்குட்பட்டு முறையான அனுமதி பெற்று கோர்ட்டில் சமர்ப்பித்து கோர்ட் அனுமதியுடன் அங்கு குடோன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்பேட்டைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்ட அனுமதியில்லை. இந்த நிலையில் அங்கு வீடுகட்டினால் தொழில் தொடங்குவதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க கூடாது என்பது விதிமுறை. எனவே யாருக்கும் எந்த இடையூறும் இல்லாத வகையில் சட்டரீதியாக அங்கு குடோன் செயல்படுகிறது என்றார்..



Next Story