கயத்தாறு தாலுகா அலுவலகத்தை மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்


கயத்தாறு தாலுகா அலுவலகத்தை மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 7:26 AM GMT)

கயத்தாறு தாலுகா அலுவலகத்தை மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு தாலுகா அலுவலகத்தை நேற்று மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கயத்தாறு பேரூராட்சியில் உள்ள 10 மற்றும் 11 ஆகிய வார்டு பகுதிகளில் கடந்த 2007- ம் ஆண்டு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவினை காலம் தாழ்த்தாமல் அரசு பதிவேட்டில் பதிவு செய்ய வலியுறுத்தி கட்சி மாவட்ட செயலாளர் அஸ்மத் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் வீரபெருமாள் முன்னிலை வகித்தாா். தகவல் அறிந்து தாசில்தார் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் நேசமணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் அங்கு வந்து போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கிருந்து விரைவில் பட்டா உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அனைவரும் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story