காயத்ரி ஜெப விரத பூஜை


காயத்ரி ஜெப விரத பூஜை
x

வாலாஜா வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் காயத்ரி ஜெப விரத பூஜை நடைபெற்றது.

ராணிப்பேட்டை

வாலாஜாவை அடுத்த மேல்புதுப்பேட்டை பசும்பொன் நகரில் உள்ள வேங்கட ஜல நாராயணா பெருமாள் கோவிலில் காயத்ரி ஜெப விரத விழா நடந்தது. ஜலகுரு பழனி சுவாமிகள் தத்வார்சனை, தீபாராதனை செய்து, பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் திருமஞ்சனம், ஆவாகன கல பூஜை, மற்றும் மாங்கல்ய சங்கல்பம் செய்தார். பரமபத வாசல் வழியாக பக்தர்கள் சென்று மூலவரை வழிபட்டனர். மேலும் கோவில் கட்டுமான பணிக்காக பக்தர்கள் கொண்டு வந்த சிமெண்டு, செங்கல், கம்பி மற்றும் கட்டுமான பொருட்கள் பகவான் சன்னதியில் சமர்ப்பிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி அறங்காவலர் வாசுதேவ சுவாமிகள் செய்திருந்தார்.


Next Story